தனித்துவ இயக்குனர்…
திரைக்கதை, கதை சொல்லும் விதம், மேக்கிங் என அனைத்து விஷயங்களிலும் தனித்துவமாக திகழ்ந்து வருபவர் மிஷ்கின். இவரது திரைப்படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சென்னையில் நம்பிக்கையோடு உலா வரும் பல உதவி இயக்குனர்களுக்கு உத்வேகமான கதை சொல்லியாக திகழ்கிறார் மிஷ்கின். மிகவும் வெளிப்படையாக மனதிற்குள் தோன்றியதை பேசும் வழக்கம் உடையவர் என்பதால் இவர் பேசும் கருத்துகள் பல நேரங்களில் சர்ச்சையை கிளப்புவது வழக்கம்.

கமல்ஹாசனை வைத்து இயக்கும் வாய்ப்பு…
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின், கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பு அமைந்தது குறித்து கூறியுள்ளார். “நான் இயக்கிய நந்தலாலா திரைப்படத்தை பார்க்க விரும்பினார் கமல்ஹாசன். நான் அவரது அலுவலகத்தில் திரையிட்டுக் காட்டினேன். அடுத்த நாள் வரச்சொன்னார். அடுத்த நாள் சென்றபோது நாம் இருவரும் ஒரு படம் பண்ணலாம் என கூறினார்.
நான் அவருக்கு மூன்று கதைகளை கூறினேன். மூன்றாவது கதை அவருக்கு பிடித்திருந்தது. 40 நாட்கள் அந்த கதை சம்பந்தமான உரையாடல்கள் நடந்தது” என மிஷ்கின் பகிர்ந்துகொண்டார்.

கமல்ஹாசன் செய்த அந்த விஷயம்…
மேலும் அப்பேட்டியில் பேசிய மிஷ்கின், “அந்த சமயத்தில் ஒரு சின்ன நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வை பற்றி நான் குறிப்பிட விரும்பவில்லை. எனக்கு அந்த நிகழ்வில் உடன்பாடு இல்லை. உடனடியாக அந்த இடத்தை விட்டு வந்துவிடவேண்டும் என எனக்கு தோன்றியது. ஆதலால் அவர் கொடுத்த அட்வான்ஸை திருப்பிக்கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். எனது 3 ஆவது படத்திலேயே 3 கோடி சம்பளம் பேசியிருந்தார் கமல்ஹாசன்” என அவர் பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.