திடீர் ரிலீஸ்
கடந்த 12 வருடங்களாக கிடப்பில் கிடந்த விஷாலின் “மதகஜராஜா” திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்று காலை திடீரென இந்த அறிவிப்பு வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இத்திரைப்படத்தை சுந்தர் சி இயக்கியுள்ள நிலையில் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது.

வெளியாவதன் பின்னணி
இந்த நிலையில் இத்திரைப்படம் இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் திடீரென ரிலீஸ் ஆவதற்கான பின்னணி காரணம் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் மறைவுக்குப் பிறகு இத்திரைப்படம் வெளிவருவதில் பல சிக்கல்கள் இருந்ததாம். தயாரிப்பாளர் உயிரோடு இருந்தபோது பல்வேறு இடங்களில் கடன் வாங்கி பல திரைப்படங்களை தயாரித்தார்.
ஆனால் இந்நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்கள் ஓடாத நிலையில் நஷ்டமே மிஞ்சியிருக்கிறது. இந்த கடன் பிரச்சனை காரணமாகத்தான் “மதகஜராஜா” இத்தனை வருடங்கள் வெளியீட்டிற்கு வராமல் இருந்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் இறந்த பிறகு இந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இத்திரைப்படத்தை வெளியிட தீவிரமாக முயன்றிருக்கின்றனர். ஆனால் எதுவும் கைக்கூடி வரவிலை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இத்திரைப்படத்தை வெளியிட்டு ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் மீதான மொத்த கடனையும் தீர்ப்பதற்கு அந்நிறுவனத்தார் முடிவு செய்துள்ளார்களாம். இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கு கிடைக்கும் பணத்தை வைத்து, இருக்கும் கடனை எல்லாம் தீர்க்க அந்நிறுவனத்தார் முடிவு செய்துள்ளனராம். இதுவே “மதகஜராஜா” திரைப்படம் வெளியாவதற்கான பின்னணி என கூறப்படுகிறது.