சிவாஜியின் பராசக்தி
சிவாஜி கணேசன் “பராசக்தி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தை இயக்கியவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு ஆகிய இருவர். இத்திரைப்படத்திற்கு வசனக்கர்த்தா கலைஞர் மு.கருணாநிதி. பாவலர் பாலசுந்தரம் என்பவர் இயக்கிய மேடை நாடகத்தை தழுவிதான் “பராசக்தி” திரைப்படம் இயக்கப்பட்டது. எனினும் இத்திரைப்படத்திற்கு முதலில் வசனக்கர்த்தாவாக ஒப்பந்தமானது கருணாநிதி அல்ல.

வெளியேறிய வசனக்கர்த்தா…
“பராசக்தி” திரைப்படத்திற்கு முதலில் வசனக்கர்த்தாவாக பணிபுரிந்து வந்தவர் திருவாரூர் தங்கராசு என்பவர். இவர் அத்திரைப்படத்தின் வசனங்களை எழுதிக்கொண்டிருந்தபோது இயக்குனர்களான கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் தினமும் எதாவது ஆங்கில திரைப்படங்களை பார்த்துவிட்டு அதன் தாக்கத்தால் உருவான சிந்தனைகளால் வசனங்களை மாற்றச் சொல்லுவாராம்.

தினமும் அவர்கள் ஒரு ஆங்கில படம் பார்க்க, எழுதிய வசனங்களை அதன் பின் மாற்றியமைக்கச் சொல்ல என்று வழக்கமாகிப்போனதாம். இதனால் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் திருவாரூர் தங்கராசு அத்திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகுதான் இத்திரைப்படத்தில் கலைஞர் மு.கருணாநிதி வசனக்கர்த்தாவாக பணியாற்றினார். அதன் பின் இத்திரைப்படத்தின் வசனங்கள் எவ்வளவு புரட்சிகரமாக அமைந்தது என்பது நமக்கே தெரிந்த விஷயம்தான்.