வெற்றி கூட்டணி
ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் அவர் நடித்த பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. பெரும்பாலும் அதிக ரஜினி திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜாவாகவே இருக்கும். ஆனால் ரஜினிகாந்த் நடித்த “வீரா” திரைப்படத்திற்கு அடுத்து ரஜினிகாந்த் நடித்த வேறு எந்த திரைப்படங்களுக்கும் இளையராஜா இசையமைக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என்று ரசிகர் ஒருவர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுதான் காரணம்!
“சினிமா என்பது நட்பை எல்லாம் தாண்டி அது ஒரு வியாபாரம். அதிலும் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் என்பது மிகப்பெரிய வியாபாரம். அப்படிப்பட்ட வியாபாரம்தான் இந்த இருவரும் இணையமுடியாமல் இருப்பதற்கு காரணம் என நான் நினைக்கிறேன்” என்று சித்ரா லட்சுமணன் அக்கேள்விக்கு பதிலளித்திருந்தார்.