நாஸ்டால்ஜிக் இயக்குனர்
“ராஜபார்வை”, “அபூர்வ சகோதரர்கள்”, “மைக்கேல் மதன காமராஜன்”, “சின்ன வாத்தியார்” போன்ற பல அட்டகாசமான திரைப்படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ். 80’s மற்றும் 90’s கிட்ஸ் பெரும்பாலும் கொண்டாடிய திரைப்படங்களில் இவரது திரைப்படங்கள் பலவற்றை கூறலாம். அந்தளவுக்கு நாஸ்டால்ஜிக் உணர்வை கொடுக்க கூடிய திரைப்படங்களை இயக்கியவர் இவர்.

கமல்ஹாசன் நடத்திய விழா
இந்த நிலையில் சிங்கீதம் சீனிவாச ராவை பாராட்டும் விதமாக நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் விழா ஒன்றை நடத்தினார். அதில் திரையுலகின் ஜாம்பவான்கள் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் இளையராஜா அந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. அந்த விழாவில் பாடலாசிரியர் வைரமுத்து கலந்துகொண்ட காரணத்தினால்தான் இளையராஜா கலந்துகொள்ளவில்லை என்று பேச்சுக்கள் எழுந்தன.

இதனை தொடர்ந்து பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில், “வைரமுத்து அந்த விழாவில் கலந்துகொள்வார் என்பதனால் கமல்ஹாசனே இளையராஜாவிற்கு அழைப்பு விடுக்காமல் இருந்திருக்கலாம்” என கூறியுள்ளார். பல ஆண்டுகளாக இளையராஜாவும் வைரமுத்துவும் இணைந்து பணிபுரியவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.