தனுஷின் இட்லி கடை
தனுஷ் தற்போது இயக்கி வரும் “இட்லி கடை” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் கதாநாயகனாகவும் நித்யா மேனன் கதாநாயகியாகவும் நடித்து வரும் நிலையில் இவர்களுடன் அருண் விஜய், ராஜ்கிரண், பார்த்திபன், சத்யராஜ், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு இத்திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில நாட்களாகவே இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக கூறப்பட்டு வருகிறது.
தள்ளிப்போவதற்கான காரணம்
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்பேட்டியில் அவர் “இட்லி கடை திரைப்படத்தின் வெளியீடு ஏப்ரல் 10 ஆம் தேதியில் இருந்து தள்ளிப்போகிறது. நித்யா மேனன், அருண் விஜய், பார்த்திபன், சத்யராஜ் ஆகியோர் ஒரே காட்சியில் நடிக்க வேண்டியதாக இருந்தது.

இந்த காட்சிக்காக இவர்களை ஒருங்கிணைப்பதற்கு சிரமமாக இருந்தது. இன்னும் 10 சதவிகிதம் படப்பிடிப்பு மீதமுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை பத்து நாட்களுக்குள் அறிவிப்போம்” என்று கூறியுள்ளார்.
ஆகாஷ் பாஸ்கரன் தற்போது “இதயம் முரளி” என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியும் வருகிறார். இதில் அதர்வா, கயது லோஹர், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.