இயக்குனர் அவதாரம்
“ராயன்” திரைப்படத்தை தொடர்ந்து “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற திரைப்படத்தை தனுஷ் இயக்கியுள்ளார். இதில் பாவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் நேற்று வெளியானது.

இத்திரைப்படம் தற்காலத் தலைமுறையினரின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் கலந்துகொள்ளவில்லை என்ற செய்திதான் இப்போது இணையத்தில் சூடுபிடித்துள்ளது.
என்ன காரணம்?
தற்போதைய தகவலின்படி இத்திரைப்படத்தின் விழாவிற்கு தான் வந்தால் மீடியாவின் கவனம் முழுவதும் நம்மை சுற்றியே இருக்கும் என்பதாலும் இத்திரைப்படத்தில் நடித்த இளம் நடிகர்களை இவ்விழாவில் முன்னிலைப்படுத்துவோம் என்ற காரணத்திற்காகவும் தனுஷ் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இன்னொரு புறம், தனுஷ் தற்போது “இட்லி கடை” திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருப்பதால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை எனவும் தகவல்கள் வருகின்றன. இதில் எது உண்மை என தெரியவில்லையாம்.