இது வழக்கமான அஜித் படமே இல்லை…
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இத்திரைப்படம் வழக்கமான அஜித் திரைப்படம் போல் இல்லை என விமர்சனங்கள் வெளிவருகின்றன. இத்திரைப்படம் முழுக்க முழுக்க காதல் என்ற ஒன்றை மையமாக வைத்து உருவான ஆக்சன் திரைப்படம் எனவும் கூறுகின்றனர்.

அந்த வகையில் இத்திரைப்படத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. இந்த ஏமாற்றத்தால் ரசிகர்கள் “Good Bad Ugly” திரைப்படத்திற்காக வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.
நான் ஏன் விடாமுயற்சியில் நடித்தேன்…
இந்த நிலையில் நேற்று அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவிடம் பேட்டி எடுத்தபோது, அவர் அஜித் ஏன் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடித்தார் என்பதை தன்னிடம் கூறியதாக ஒரு செய்தியை பகிர்ந்துகொண்டார். அதாவது காதல் என்பது ரொமான்ஸ் மட்டும் கிடையாது, அது ஒரு அக்கறை. இதற்காக இத்திரைப்படத்தில் அஜித் நடித்ததாக கூறினாராம்.