விஜய்யின் கடைசி படம்
நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் தனது 69 ஆவது திரைப்படத்தை கடைசி திரைப்படமாக அறிவித்தார். அந்த வகையில் அவரது 69 ஆவது திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளிவரும் என்று கூறப்பட்டது. ஆனால் இத்திரைப்படத்தை 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சில நாட்களாக ஒரு தகவல் உலா வருகிறது.

விஜய் படத்துக்கே இப்படி ஒரு நிலைமையா?
இந்த நிலையில் “ஜனநாயகன்” திரைப்படத்தின் ஓடிடி உரிமம் இன்னும் விற்கப்படவில்லையாம். நெட்பிலிக்ஸ் ஓடிடி தளம் 2025 ஆம் ஆண்டிற்கான படங்களை வாங்கி முடித்துவிட்டது. ஆதலால் “ஜனநாயகன்” திரைப்படத்தை இந்த ஆண்டு நெட்பிலிக்ஸ் வாங்கினாலும் 2026 ஆம் ஆண்டில்தான் அதனை ஒளிபரப்பும் என்பதால் “ஜனநாயகன்” திரைப்படத்தின் வெளியீட்டை 2026 ஆம் ஆண்டிற்கு தள்ளிவைத்துவிடலாம் என படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.