தள்ளிப்போன விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இச்செய்தி அஜித் ரசிகர்களை பெருத்த சோகத்திற்குள் மூழ்கடித்தது. “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் இறுதியிலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டென்று வந்த Good Bad Ugly
இதனிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “Good Bad Ugly” திரைப்படத்தை குறித்த முக்கியமான அறிவிப்பு திடீரென நேற்று வெளியிடப்பட்டது. அதாவது “Good Bad Ugly” திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
திடீர் அறிவிப்பு ஏன்?

இந்த நிலையில் “Good Bad Ugly” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை இவ்வளவு அவசரமாக வெளியிடுவதற்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் இருப்பதாக கூறுகின்றனர். அதாவது லைகா நிறுவனம் தான் தயாரித்த “விடாமுயற்சி” திரைப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டம் போட்டதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. “விடாமுயற்சி” ஏப்ரல் மாதம் வெளிவந்தால் நாம் தயாரித்த “Good Bad Ugly” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போகுமே என நினைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஏப்ரல் மாதத்தில் “Good Bad Ugly” வெளிவரும் என அதிரடியாக அறிவித்துவிட்டதாம்.