ரஜினிகாந்தின் ஒரிஜினல் பெயர்
ரஜினிகாந்த் நடிக்க வருவதற்கு முன்பு அவரது பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் ஆக இருந்தது. அவர் முதன் முதலில் நடித்த “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தில் அவரது பெயர் சினிமாவுக்காக ரஜினிகாந்த் என்று மாற்றப்பட்டது. இப்பெயரை அவருக்கு சூட்டியவர் ரஜினிகாந்தை தான் இயக்கிய “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தர். அதன் பின் ரஜினிகாந்த் என்ற பெயர் தமிழ் சினிமாவின் வரலாற்றில் நிலைத்துப்போனது.

கூலி டீசர் வெளியீட்டு தேதிக்கு பின்னால் உள்ள காரணம்…
லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் டீசர் வருகிற 14 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த தேதியில் அப்படி என்ன விஷேசம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஒரு சிலர், பாலச்சந்தர் ரஜினிகாந்திற்கு 50 வருடங்களுக்கு முன்பு மார்ச் 14 ஆம் தேதி அன்றுதான் ரஜினிகாந்த் என்ற பெயரை சூட்டினார்.
ஆதலால்தான் அதை நினைவில் கொண்டு “கூலி” படத்தின் டீசர் மார்ச் 14 ஆம் தேதி வெளியிடப்படுவதாக கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் மார்ச் 14 ஆம் தேதி லோகேஷ் கனகராஜ்ஜின் பிறந்தநாள் ஆகும். இக்காரணத்தால்தான் வருகிற 14 ஆம் தேதி “கூலி” படத்தின் டீசர் வெளியாவதாக ஒரு தகவல் வருகிறது.
