நடிகர் சத்யராஜ்:
தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகர் சத்யராஜ். நல்ல உயரம் கட்டுமஸ்தான உடல் தோற்றத்துடன் ஹீரோவாகவும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த சத்யராஜ் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

70களில் நடிக்க ஆரம்பித்து 80 மற்றும் 90களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர் பின்னர் 2000 காலகட்டத்தில் வில்லன் ஆகவும் 2010 காலகட்டங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் தொடர்ச்சியாக நடித்து பிரபலமான நடிகர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் .
சத்யராஜின் வெற்றி படங்கள்:
சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த பெரியார் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அந்த திரைப்படத்தில் சத்யராஜ் ஊதியமே வாங்காமல் நடித்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது நடிப்பில் வெளிவந்த வேதம் புதிது, வால்டர், வெற்றிவேல், மலபார் போலீஸ், பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, குங்குமப்பொட்டு கவுண்டர், இங்கிலீஷ் காரன், நண்பன், பூவிழி வாசலிலே, அமைதிப்படை, கடலோர கவிதைகள், ரிக்சா மாமா உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படங்களாக பார்க்கப்பட்டது.
நான் வாங்கிய அதிக சம்பளம்…
தொடர்ந்து நடித்து வரும் நடிகர் சத்யராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் முதல் முதலாக தான் வாங்கிய அதிக தொகை குறித்தும் அப்போது தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார். நான் படு ஒரு படத்திற்காக வில்லனாக நடிக்கும் போது 15,000 சம்பளம் மட்டும்தான் வாங்கிக் கொண்டிருந்தேன்.

ஆனால், திடீரென எனக்கு பெரும் தொகையை கொடுத்து ஆச்சர்யப்பட வைத்தது பஞ்சு அருணாச்சலம் அவர்கள் தான். ஆம், ஜப்பானில் கல்யாணராமன் என்ற திரைப்படத்திற்காக எனக்கு முதன்முறையாக ரூ. 1லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்தார்.
அது நான் கேட்காமலே நான் எதிர்பார்க்காமலே எனக்கு கிடைத்ததால் பெரும் ஆச்சரியமாக இருந்தது . அதுதான் நான் வாங்கி அதிக சம்பளத் தொகை. இன்று வரை அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அதுதான் என்னுடைய அந்தஸையும் மார்க்கெட்டையும் உயர்த்தியது என சத்யராஜ் பேசியிருக்கிறார்.