ஊ சொல்றியா மாமா
அல்லு அர்ஜூனின் “புஷ்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா” பாடலை யாராலும் மறக்கமுடியாது. அப்பாடலில் சமந்தாவின் நடனம் பட்டித் தொட்டி எங்கும் உள்ள ரசிகர்களை வாயை பிளக்க வைத்தது.

அப்பாடலில் சமந்தாவின் உடல் நளினம் பலரையும் ஓ போட வைத்தது. குறிப்பாக சமந்தாவின் கச்சிதமான மேனி பல ரசிகர்களை மெய் மறக்கச் செய்தது. இந்த நிலையில் இப்பாடலுக்கு முதலில் நடனமாடும் வாய்ப்பை தவறவிட்ட நடிகையை குறித்து ஒரு தகவல் பரவி வருகிறது.
கெட்டிகா சர்மா
தெலுங்கு சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் நடிகையாக வலம் வருபவர் கெட்டிகா சர்மா. இவர் தற்போது “ராபின்ஹுட்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் “அதி தா சர்ப்ரைஸு” என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களை மயக்க நிலையில் ஆழ்த்தியது. கவர்ச்சி தழும்ப தழும்ப இப்பாடலில் நடனமாடியுள்ளார் கெட்டிகா சர்மா.

இந்த நிலையில் “புஷ்பா” திரைப்படத்தின் ஊ சொல்றியா பாடலுக்கு முதலில் நடனமாட இருந்தது கெட்டிகா சர்மாதான் என கூறப்படுகிறது. ஆனால் அவரால் அந்த சமயத்தில் அப்பாடலுக்கு ஒப்பந்தம் போட முடியவில்லையாம். அதனை தொடர்ந்துதான் சமந்தா அப்பாடலுக்கு நடனமாடினாராம். இப்படி ஒரு தகவல் இணையத்தில் வெளிவருகிறது.