மதகஜராஜாவை தயாரித்த ஜெமினி
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த “மதகஜராஜா” திரைப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் அதற்கு முன்பு, “கடல்”, “போடா போடி”, “குட்டி” போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளது.

1940 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.வாசன் தொடங்கிய “ஜெமினி ஸ்டூடியோஸ்” நிறுவனம் 1975 ஆம் ஆண்டு மூடப்பட்டது. அந்த நிறுவனத்தைதான் ஒருவர் விலைக்கு வாங்கி “ஜெமினி பிலிம் சர்க்யூட்” என்ற் பெயரில் பல திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார்.
இயக்குனர் சரணின் ஜெமினி?
எனினும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தை இயக்குனர் சரண் தான் நிர்வகித்து வருகிறார் என்று ரசிகர்கள் பலரும் நினைத்து வருகிறார்கள். ஆனால் இயக்குனர் சரணின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் “ஜெமினி புரொடக்சன்ஸ்”.

சரண் “ஜெமினி” என்ற மிகப்பெரிய ஹிட் திரைப்படத்தை இயக்கியதை தொடர்ந்து அவர் ஜெமினி புரொடக்சன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் சரண் “ஆறு”, “முனி” போன்ற திரைப்படங்களை தயாரித்தார். மேலும் “வட்டாரம்”, “மோதி விளையாடு”, “ஆயிரத்தில் இருவர்” போன்ற திரைப்படங்களையும் தயாரித்து இயக்கவும் செய்தார். இதில் இருந்து ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்திற்கும் இயக்குனர் சரணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிய வருகிறது.