பிளாக்பஸ்டர் ஹிட்…
கடந்த வாரம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “டிராகன்”. இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வரை இத்திரைப்படம் ரூ.100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இவ்வாறு பாக்ஸ் ஆஃபீஸை திணறடித்துக் கொண்டிருக்கிறது “டிராகன்”. அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நடிகராக உருமாறி வருகிறார்.

உஷாராக வாய்விட்ட தயாரிப்பாளர்…
இந்த நிலையில் ரசிகர் ஒருவர், “இன்றைய தேதியில் நடிகர் அஜித்குமாரை வைத்து படமெடுத்து லாபம் ஈட்டுவதை விட பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் எடுத்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்பது உண்மையா? நடிகர்கள் சூர்யா, அஜித் ஆகியோரை வைத்து படம் எடுப்பதை விட பிரதீப் ரங்கநாதன்தான் தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபம் ஈட்டித் தரக்கூடிய நடிகராக இப்போதைக்கு இருக்கிறாரா?” என்று ஒரு கேள்வியை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டிருந்தார்.

இந்த கேள்விக்கு சித்ரா லட்சுமணன், “இன்றைய தேதியில் தமிழ் சினிமாவினுடைய ஜெயிக்கும் குதிரையாக பிரதீப் ரங்கநாதன் திகழ்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை” என்று மட்டும் பதிலளித்திருந்தார். இவ்வாறு சூசகமாக பதில் கூறி சர்ச்சையில் சிக்காமல் சித்ரா லட்சுமணன் நழுவிக்கொண்டார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.