ரஜினிகாந்த்-மம்மூட்டி
ரஜினிகாந்த்-மம்மூட்டி ஆகியோரின் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த “தளபதி” திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் கிளாசிக் திரைப்படமாக காலம் தாண்டியும் கொண்டாடப்பட்டு வருகிறது. மணிரத்னம் இயக்கிய இத்திரைப்படத்தில் இளையராஜாவின் இசையும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் இத்திரைப்படத்தை வேறு ஒரு உலக தரத்திற்கே கொண்டுசென்றது. சமீபத்தில் கூட ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று இத்திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்ட போது ரசிகர்களிடம் பெருமளவு வரவேற்பு இருந்தது.

தளபதி தோல்வி படமா?
இந்த நிலையில் “தளபதி” திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த சமயத்தில் அத்திரைப்படம் ஒரு தோல்வி திரைப்படம் என்றே பலரும் கூறி வருகின்றனராம். அத்திரைப்படம் வெகுஜன ரசிகர்களை கவரவே இல்லை எனவும் ஒரு எண்ணம் வலம் வருகிறதாம். “தளபதி” திரைப்படம் வெளியான அதே நாளில் சத்யராஜின் “பிரம்மா”, பிரபுவின் “தாலாட்டு கேட்குதம்மா” ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. இந்த இரண்டு திரைப்படங்கள்தான் வெற்றிபெற்றன என்று கூறி வருகின்றனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், “பிரம்மா, தாலாட்டு கேட்குதம்மா ஆகிய இரண்டு திரைப்படங்களையும் விட தளபதி திரைப்படம் அதிக வசூலை குவித்தது” என்று தனது வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.