கூட்ட நெரிசலில் மரணித்த பெண்
“புஷ்பா 2” திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியான நிலையில் அதற்கு முந்தைய நாள் ஹைதராபாத்தில் அமைந்துள்ள சந்தியா திரையரங்கத்தில் “புஷ்பா 2” பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. இந்த திரையிடலில் அல்லு அர்ஜூன் கலந்துகொண்டார். அவரை பார்க்க கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற 35 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது 9 வயது மகன் படுகாயங்களுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதியப்பட்டது. எனினும் அவர் ஒரே நாளில் ஜாமீனில் வெளிவந்தார்.

செம்மர கடத்தல் கும்பல் படத்துக்கு விருது
இந்த நிலையில் தெலங்கானாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சீதாக்கா பேசுகையில், “ஜெய் பீம் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை. ஆனால் செம்மர கடத்தல் கும்பல் பற்றிய புஷ்பா படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

கடத்தல்காரனை ஹீரோவாகவும் காவல்துறையை வில்லனாகவும் சித்தரித்த படம் அது” என்று கடுமையாக சாடியுள்ளார்.