என்னைக்கும் விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் ஆவலோடு இத்திரைப்படத்தை கண்டுகளித்து வருகின்றனர். எனினும் இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாக நகர்கிறது எனவும் இரண்டாம் பாதியில் படம் ஓரளவு Take Off ஆகிறது எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர். எனினும் திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வுகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

அஜித் ரசிகர்களை வம்பிழுக்கும் விமர்சகர்…
இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான தமிழ் சினிமா ரிவ்யூ பிரஷாந்த், “விடாமுயற்சி” திரைப்படத்தை குறித்து விமர்சிக்கையில், “விடாமுயற்சி திரைப்படத்தின் கதை டெல்லியில் நடப்பது போல்தான் முதலில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அஜர்பைஜானில் இத்திரைப்படத்தின் களம் அமைந்தது அவ்வளவாக கனெக்ட் ஆகவில்லை. படத்தில் அஜர்பைஜான் மொழி பேசுபவர்கள் அதிக காட்சிகளில் இடம்பெற்றிருப்பதால் இது தமிழ் படமா அல்லது அஜர்பைஜான் படமா என்று குழப்பம் ஏற்படுகிறது. எனினும் அஜர்பைஜானைச் சேர்ந்த நடிகர்களை மகிழ் திருமேனி கச்சிதமாக நடிக்க வைத்திருக்கிறார். இது எளிதான விஷயமே இல்லை. அஜர்பைஜான் மொழியில் பேசி அவர்களுக்கு புரியவைத்து அவர்களை நடிக்க வைத்திருக்கிறார் என்றால் உண்மையில் மகிழ் திருமேனி மனிதனே இல்லை.

ஆனால் அஜர்பைஜான் மொழி கொஞ்சம் ஓவர் டேக் செய்துவிடுகிறது. திரைக்கதை எந்த திசையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என தெரியவில்லை. இந்த படத்தில் விடாமுயற்சி என்பது திரைக்கதைதான். திரைக்கதைக்கு கயிற்றை போட்டு விடாமல் முயற்சி செய்து இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள்” என பிரசாந்த் தனது வீடியோவில் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.