கம்பேக்கில் கலக்கி வரும் சிம்பு…
சிம்பு ஹீரோவாக நடிக்க தொடங்கியதில் இருந்து அவரது கெரியர் எந்தளவுக்கு உச்சத்தை தொட்டதோ ஒரு காலகட்டத்திற்குப் பிறகு சில காரணங்களால் அவரது கெரியர் அதேயளவுக்கு கீழே இறங்கியது. அவர் மீது பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. அவரது உடல் எடையும் அதிகரித்தது.
அதன் பின் தனது உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக கம்பேக் கொடுத்தார். அவர் கம்பேக் கொடுத்த பிறகு நடித்த “மாநாடு” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் அவர் கம்பேக் கொடுத்த சமயத்தில் நடித்த “ஈஸ்வரன்” திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட “ஈஸ்வரன்” திரைப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன் அத்திரைப்படத்தின் தோல்வி குறித்து சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

காரி துப்பிட்டாங்க
“ஈஸ்வரன் பட கதையில் நான் ஜெய்யை நடிக்க வைக்கலாம் என்றுதான் அந்த கதையை எழுதினேன். அந்த கதை ஒரு குடும்பக்கதை. அதில் ஹீரோவுக்கு வேலையே கிடையாது. அப்போது சிம்பு தன்னை வைத்து ஒரு படம் இயக்குமாறு என்னிடம் கேட்டார். ‘மாநாடு பட ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறேன். அதற்கு முன்பு சின்னதாக ஒரு திரைப்படம் நாம் பண்ணலாம். 23 நாள் கால்ஷீட் தருகிறேன்’ என்றார்.

ஜெய்க்கு எழுதிய குடும்பக் கதையை அவரிடம் கூறினேன். ‘நல்லா இருக்கு பிரதர், இதையே படமாக எடுக்கலாம்’ என்றார். சிம்பு கொடுத்த 23 நாட்களுக்கு அந்த கதையைத்தான் எடுக்க முடியும். சிம்பு 80 நாட்கள் கொடுத்திருந்தால் அதற்கு வேறு கதையை எடுத்திருக்கலாம். சிம்பு வைத்த செக் எனக்கு 23 நாட்கள். ஜெய்க்கு எழுதிய கதையை சிம்புவிற்கு ஏற்றது போல் கொஞ்சம் மாற்றி எடுத்துப் பார்த்தோம். ஆனால் சிம்புவுக்கு அது செட் ஆகவில்லை. அந்த படத்தை காரி துப்பிவிட்டார்கள்” என மிகவும் வெளிப்படையாக பேசினார் இயக்குனர் சுசீந்தரன்