தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆன சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்திருக்கிறார். தொடர்ச்சியாக பல கைவிடப்பட்ட படங்களால் சோர்வடைந்து போன சூர்யா மிகப்பெரிய நம்பிக்கையுடன் கங்குவா படத்தின் வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
அதே வேளையில் கங்குவா பல பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகிறது. ஏற்கனவே அவர் புறநானூறு மற்றும் ஒரு கன்னட படம் ஹிந்தி படம் என தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் சூர்யாவுக்கு டிராப் ஆக்கிப் போனது.
இதனால் எப்படியாவது மிகப்பெரிய வெற்றி கொடுக்க வேண்டும். இப்படியே போனால் மார்க்கெட்டில் ஆளே அட்ரஸ் இல்லாமல் போய்விடுவோம் என்ற பயத்தோடு கங்குவா திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றி கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தார்.
அக்டோபர் 10ம் தேதி ஆயுத பூஜைக்கு இந்த படம் ரிலீஸ் செய்ய பார்த்தார்கள். ஆனால், சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியே வந்த வேட்டையன் திரைப்படம் அதே நாளில் ரிலீஸ் ஆனதால் கங்குவா பின்வாங்கி போனது.
இப்படி சூர்யா நம்பி இருந்த கங்குவார் படத்திற்கு முதல் முதலாக அடுத்தடுத்த தடைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வருகிறது நவம்பர் 14ஆம் தேதி கங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதற்கு முன்னதாக பிரம்மாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடத்தினார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி நடத்திய தேதி தான் சரியில்லை.
ஆம் விஜய் கட்சியின் டி வி கே மாநாடு நடத்திய அதே நாளில் கங்குவா இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டதால் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் தொண்டர்களும் மக்களும் விஜய்யின் மாநாட்டை நோக்கியே படையெடுத்தனர்.
மேலும் அந்த இசை வெளியீட்டு விழாவில் சூர்யா கிட்டத்தட்ட விஜய் போன்றே மேனரிசம் செய்து காட்டியதால் அடுத்த விஜய் நாம்தான் என்ற ஒரு நினைப்பில் சூர்யா பேசுகிறார் என்றெல்லாம் விமர்சனமும் கேலி கிண்டலும் எழுந்தது.
இப்படியாக சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்கு நாளா பக்கமும் சட்டர் சாத்துவதால் சூர்யா மிகுந்த பயத்துடனும் அச்சத்துடனும் இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் செய்திகள் தெரிவிக்கிறது.