சுப்ரீம் ஸ்டார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வந்தவர் சரத்குமார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என பலரும் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே தனக்கென தனி பாணியில் பயணித்து ரசிகர்களின் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்தவர்.
சரத்குமார் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் தற்போது “ஸ்மைல் மேன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் சரத்குமார். இது சரத்குமாரின் 150 ஆவது திரைப்படமாகும்ம். இத்திரைப்படம் வருகிற 27 ஆம் தேதி திரையில் வெளிவரவுள்ளது. இத்திரைப்படம் ஒரு திரில்லர் திரைப்படம் என அறியப்படுகிறது.

சூர்ய வம்சம்
சரத்குமார் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சூர்ய வம்சம்”. இத்திரைப்படம் காலத்தை தாண்டியும் கொண்டாடப்படும் கிளாசிக் சினிமாவாக அமைந்தது. இப்போதும் கூட இத்திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் அதிகம் பேர் அமர்ந்து பார்ப்பர். அந்தளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பத்திற்குரிய திரைப்படமாக “சூர்ய வம்சம்” அமைந்துள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற புகைப்படம் எடுக்கும் காட்சியை மீண்டும் ரீகிரியேட் செய்துள்ளார் சரத்குமார். இதில் “ஸ்மைல் மேன்” திரைப்படத்தின் படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.