90’ஸ் கிட்களின் ஃபேவரைட் திரைப்படம்…
1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சூர்ய வம்சம்”. இத்திரைப்படத்தை ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். இத்திரைப்படம் கே டிவியில் இப்போதும் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்தளவுக்கு காலத்தை தாண்டியும் இத்திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக 90களில் பிறந்தவர்களுக்கு இத்திரைப்படம் விருப்பத்திற்குரிய திரைப்படமாகும்.

சூர்ய வம்சம் ஓடாது…
“சூர்ய வம்சம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது இத்திரைப்படம் நிச்சயம் ஓடாது என்று படக்குழுவினருக்குள் சில பேச்சுக்கள் அடிபட்டன. அந்த சமயத்தில் வெளிவந்த “நாட்டாமை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருந்ததால் “சூர்ய வம்சம்” போன்ற Soft ஆன திரைப்படம் ஓடாது என்றே நினைத்திருந்தனராம். இதன் காரணமாக “சூர்ய வம்சம்” திரைப்படத்தை சற்று நிறுத்தி வைத்துவிட்டு விஜய்யின் “லவ் டூடே” திரைப்படத்தை வெளியிட்டாராம் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி.

அதன் பிறகு “சூர்ய வம்சம்” திரைப்படத்திற்காக “காதலா காதலா” என்ற பாடலை பதிவு செய்து அதனை படமாக்கிய பின்பு இத்திரைப்படத்தை அரைமனதோடுதான் வெளியிட்டார்களாம் படக்குழுவினர். ஆனால் அவர்களின் கணக்கு பொய்த்துப்போனது. “சூர்ய வம்சம்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.