ஏமாற்றம் தந்த கங்குவா:
சூர்யாவின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளிவந்த திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தின் மீது சூர்யா மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். குறிப்பாக கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வி திரைப்படங்களில் நடித்து வந்த சூர்யா கங்குவா திரைப்படத்திலிருந்து எப்படி ஏனும் மீண்டும் விடலாம் என பெரும் நம்பிக்கையோடு இருந்து வந்தார்.

அதற்காக தன்னுடைய 200% உழைப்பை போட்டிருக்கிறார்கள். சிவா சிறுத்தை சிவா இயக்கத்தில் மிரட்டலான நடிப்பில் சூர்யா இந்த திரைப்படத்தை நடித்திருந்தார். ஆனால் படம் வெளியாகி படுதோல்வி அடைந்ததோடு பலரும் மிகவும் மோசமாக படத்தை விமர்சித்து தள்ளி இருந்தார்கள்.
கோவிலில் தரிசனம்:
ரூ. 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை பெரிதும் நம்பியிருந்த சூர்யாவுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அது மட்டும் இல்லாமல் பலரும் சூர்யாவின் படத்தை மிகவும் மோசமாக விமர்சித்து தள்ளியிருந்தார்கள்.
இதனால் இந்த தோல்வியிலிருந்து சூர்யா எப்படி மீண்டு வருவார் என ரசிகர்களை கேள்வி எழுப்பி வந்த சமயத்தில் தற்போது நடிகை ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் சேர்ந்து கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது .
சோகத்தில் சூர்யா:
அதில் சூர்யா வேட்டி மற்றும் துண்டுடன் இருக்க ஜோதிகா சேலை அடைந்து கொண்டு சென்று இருக்கிறார். இந்த புகைப்படத்தில் சூர்யா முகம் எல்லாம் வாடி போய் முகத்தில் சிரிப்பே இல்லாமல் மனதளவில் ரொம்பவே உடைந்து போய் காணப்படுகிறார் .

மேலும் அருகில் என்றென்றும் கொண்டிருக்கும் ஜோதிகாவும் கண்களில் கண்ணீர் தேங்கி இருக்கும் படி சோகத்தில் சிறிய ஸ்மைல் கொடுத்து போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக சூர்யாவுக்கு பலரும் ஆறுதல் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
ரசிகர்கள் ஆறுதல்:
மனுஷன் மனதளவில் ரொம்பவே உடைஞ்சு போயிருக்காரு இந்த புகைப்படத்தை பார்த்தாவே தெரியுது. நிச்சயம் அடுத்த படம் ஹிட்டாகிவிடும் கங்குவா படத்திற்காக நீங்கள் போட்ட உழைப்பை மற்ற நடிகர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது எங்களுக்கு உங்கள் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது நீங்கள் துவண்டு போய்விடாமல் தைரியமாக இருங்கள் என சூர்யா ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறிய வருகிறார்கள்.