தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தில் இருந்த வந்த சூர்யா தற்போது பாலிவுட் சினிமாவில் அதிக கவனத்தை செலுத்தி அங்கு மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டார்.
தொடர்ந்து பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் திரைப்படங்களில் நடிக்க மும்மூரம் காட்டி வருகிறார். அத்துடன் மும்பையில் பல்வேறு சொந்தமாக பிசினஸையும் செய்து மும்பையிலே தனது மனைவி ஜோதிகா மற்றும் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார் .
இந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவாதிரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பாலிவுட்டின் பிரபலமான ஹீரோயினான திஷா பதானி அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
கங்குவா திரைப்படம் இந்திய சினிமாவில் நீண்ட நாட்கள் பேசப்படும் என நம்புகிறேன் என சூர்யா அந்த திரைப்படத்துக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
Also Read : அடச்சீ….இழுத்து மூடு – கணவருக்கு அந்த இடத்தில் முத்தம் – அசிங்கம் பண்ண ஸ்ரேயா சரண்!
இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா மற்றும் திரைப்படத்தின் வில்லனான பாபி தியோல் மற்றும் ஹீரோயின் திஷா பதானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
அப்போது பாபி தியோல் ஹீரோயின் திஷா பதானி இடுப்பில் கை வைத்து நெருக்கமாக இறுக்கி அணைத்து போஸ் கொடுத்தபோது சூர்யா ஹீரோயின் அருகில் நின்று போஸ் கொடுக்கவே ரொம்பவும் கூச்சப்படுகிறார்.
மேலும், அவரது கைகளை பின் பக்கமாக கட்டிக்கொண்டு ஹீரோயின் அருகில் நின்று போஸ் கொடுத்த சூர்யாவின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுதான் தமிழ் நடிகர்களுக்கும் ஹிந்தி நடிகர்களுக்கும் உள்ள வித்தியாசம்… எங்கு சென்றாலும் எங்கள் நடிகர்கள் தலைசிறந்தே காணப்படுவார்கள்.
ஹீரோயின் இடுப்பை பிடித்து போஸ் கொடுக்க நாங்க என்ன வடக்கனா என சூர்யா ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.