சக்கைபோடு போடும் அமரன்:
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோ என்று அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்து திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன்.

இந்த திரைப்படம் சாதனை படைத்து சிவகார்த்திகேயன் தெரியரிலேயே மிகப்பெரிய வெற்றி ஆக அமரன் திரைப்படம் அவருக்கு கை கொடுத்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் சம்பளம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
இப்படியான நேரத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள கங்குவா திரைப்படம் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்து அதல பாதாளத்தில் விழுந்திருக்கிறது. இந்த வசூல் மிக மோசமாக அடிவாங்கி இருப்பதாக கூறப்படுகிறது .
அதல பாதாளத்தில் விழுந்த கங்குவா:
இந்த திரைப்படம் வெளிவந்த நாளில் ஓரளவுக்கு நல்ல வசூல் ஈட்டியது. அதாவது ரூ. 23 கோடி வசூல் ஈட்டிய நிலையில் அப்படியே அவரது எதிர்மறையான விமர்சனங்களால் வசூல் சர்ரென என்று சறுக்கி வெறும் ரூ. 3 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது .

இதுவரை கங்குவா திரைப்படம் ரூ.140 கோடி கோடிக்கு குறைவான வசூலை ஈட்டி உலக உலக அளவில் குறைவான வசூலை பெற்றுள்ளது. அமரன் திரைப்படம் மூன்றாவது வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு வரும் நிலையில் நேற்று 300 கோடி தாண்டி மாபெரும் வசூல் சாதனை படைத்திருக்கிறது.
வெறும் 19 நாட்களில் 300 கோடி வசூல் ஈட்டி இருக்கும் அமரன் திரைப்படத்தின் கிட்ட கூட கங்குவா திரைப்படத்தால் நெருங்க முடியாது என்கிறது சினிமா வட்டாரம் . இதனால் சூர்யாவின் கங்குவா திரைப்படம் அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது இது சூர்யாவின் சினிமா கெரியரில் மிகப்பெரிய சறுக்கலாக பார்க்கப்படுகிறது.