சூர்யாவின் ரெட்ரோ
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ரெட்ரோ”. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சூர்யா முரண்டு பிடித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் அப்செட்!
அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இந்த காட்சியை அப்படி மாற்றுங்கள், அந்த காட்சியை இப்படி மாற்றுங்கள் என்று தொந்தரவு கொடுக்கத் தொடங்கிவிட்டாராம். இதனால் கார்த்திக் சுப்பராஜ் அப்செட் ஆகிவிட்டாராம். எனினும் கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவை சமாளித்துக்கொண்டு அப்படப்பிடிப்பை முடித்துக்கொடுத்தாராம்.