சூர்யா நடித்த வணங்கான்
பாலா இயக்கத்தில் உருவான “வணங்கான்” திரைப்படத்தில் முதலில் சூர்யா கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படத்தை சூர்யா தயாரித்தும் வந்தார். பல நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட பல மனஸ்தாபங்கள் காரணமாக சூர்யா, “வணங்கான்” திரைப்படத்தில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “வணங்கான்” திரைப்படத்தை தயாரிக்க அருண் விஜய் இத்திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

10 கோடி
இந்த நிலையில் “வணங்கான்” திரைப்படத்தை முதலில் சூர்யா நடித்து தயாரித்தபோது ரூ.10 கோடிக்கு மேல் இத்திரைப்படத்திற்கு அவர் செலவு செய்ததாக கூறப்படுகிறது. எனினும் சூர்யா இத்திரைப்படத்தில் இருந்து வெளிவந்தபோது பாலாவிடம் அப்பணத்தை திரும்ப கேட்கவில்லையாம். மனஸ்தாபங்களையும் தாண்டி அவர்களின் நட்பு அங்கே ஜெயித்தது என கூறுகின்றனர்.