கனவுக்கண்ணன்
தெலுங்கு சினிமா ரசிகைகளின் கனவுக்கண்ணனாக வலம் வரும் விஜய் தேவர்கொண்டா, தற்போது தனது 12 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை கௌதம் தின்னனுரி இயக்கி வருகிறார். கௌதம் தின்னனுரி நானியை வைத்து “ஜெர்சி” என்ற புகழ்பெற்ற திரைப்படத்தை இயக்கியவர். அதனை தொடர்ந்து “மேஜிக்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள கௌதம், தற்போது விஜய் தேவரகொண்டாவின் 12 ஆவது திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

விஜய் தேவர்கொண்டா படத்தில் சூர்யா!
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தமிழ் டீசரில் சூர்யா குரல் கொடுத்துள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. வேற்றுமொழி திரைப்படத்தின் டீசருக்கு சூர்யா குரல் கொடுப்பது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.
