முன்னணி நடிகர்
தமிழின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் “ரெட்ரோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே மலையாள இயக்குனர் பசில் ஜோசஃப் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

தெலுங்கு பட இயக்குனருடன் இணையும் சூர்யா!
இந்த நிலையில் தெலுங்கில் “கார்த்திகேயா” திரைப்படத்தை இயக்கிய சந்து மொன்டேட்டி இயக்கத்தில் சூர்யா ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. ரசிகர்கள் பலரும் “வாடிவாசல்” திரைப்படத்திற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் நிலையில் சூர்யா இவ்வாறு பல இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என அடிக்கடி வெளிவரும் செய்தி வெற்றிமாறன் ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.