கௌதம் மேனன் ஆதங்கம்!
சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய “காக்க காக்க”, “வாரணம் ஆயிரம்” ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் அதன் பிறகு இருவரின் கூட்டணி இணையவே இல்லை. எனினும் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தில் முதலில் சூர்யாவை நடிக்க வைக்க முயன்றார் கௌதம் மேனன். ஆனால் சூர்யா அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கௌதம் மேனன், “சூர்யா துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் யோசிக்காமல் நடித்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். துருவ நட்சத்திரம் கதையை குறித்து அவரும் நானும் பலமுறை பல முறை டிஸ்கஷன் செய்துள்ளோம்.

ஆனால் அவர் அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. நான் அவரிடம் Favor கேட்கவில்லை. என்னை நம்புங்கள் என்றுதான் கூறினேன்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சூர்யா போட்ட கண்டிஷன்!
இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, தனது வீடியோ ஒன்றில் பேசியபோது, கௌதம் மேனனுக்கும் சூர்யாவுக்கும் இடையே நடந்த மனஸ்தாபங்கள் குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

அதாவது சூர்யா முதலில் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது, ஆனால் கௌதம் மேனன் தயாரிப்பில் நடிக்க மறுத்திருக்கிறார். வேறு தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்க முன் வந்தால் நடிப்பதாக கூறினாராம். ஆனால் கௌதம் மேனன் விடாப்பிடியாக தானே தயாரிப்பதாக கூறினார். ஆதலால்தான் சூர்யா அத்திரைப்படத்தில் நடிக்கவில்லையாம்.
கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்து இயக்கிய “துருவ நட்சத்திரம்” திரைப்படம் பல ஆண்டுகளாக வெளிவராமல் கிடப்பில் கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.