வாடிவாசல்
வெற்றிமாறன் சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற உள்ள “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்திரைப்படத்தின் டைட்டில் புரொமோ வெளிவந்தது. ஆனால் வெற்றிமாறன் “விடுதலை பாகம் 2” திரைப்படத்தில் பிசியாக இருந்ததால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதாகிக்கொண்டே வந்தது. எனினும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

பல நாட்களாக ஷூட்டிங்…
வெற்றிமாறனை பொறுத்தவரை அவர் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளை கூட எடுத்துக்கொள்வார். “விடுதலை” மற்றும் “விடுதலை 2” ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு நாட்களே இதற்கு எடுத்துக்காட்டாகும். இந்த நிலையில் வெற்றிமாறனின் இந்த வழக்கத்தை புரிந்துகொண்ட சூர்யா, ஒரு மாஸ்டர் பிளான் ஒன்றை தீட்டியிருக்கிறாராம்.

சைடு Gap-ல ஷூட்டிங்
அதாவது பிரபல மலையாள இயக்குனரான அமல் நீரத் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம் சூர்யா. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நாட்களில் அவ்வப்போது கிடைக்கும் இடைவெளி நாட்களை வைத்து புதிய திரைப்படத்தில் நடித்து முடித்துவிடலாம் என சூர்யா திட்டம் போட்டிருக்கிறாராம். வெற்றிமாறன் தான் இயக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்பை அதிக நாட்கள் நடத்துவது உண்டு என்பதை புரிந்துகொண்டு சூர்யா இவ்வாறு திட்டம் போட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.