ஆர் ஜே பாலாஜி- சூர்யா கூட்டணி…
சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் ஷிவதா, சுவாசிதா, யோகி பாபு, நட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் கருப்பசாமி அல்லது அய்யனார் சாமியை மையப்படுத்திய கதையம்சத்தில் உருவாகி வரும் திரைப்படம் என கூறப்படுகிறது.

அய்யனாராக சூர்யா
இந்த நிலையில் சூர்யா இத்திரைப்படத்தில் அய்யனார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதாவது படத்தில் ஒரு பாதியில் வக்கீலாகவும் மறு பாதியில் அய்யனாராகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.