சூப்பர் ஸ்டார்
ஒரு பேருந்து நடத்துனராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த், இன்று சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் என்றால் அவர் பட்ட துயரங்கள் ஏராளம். பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஓடி வந்ததில் இருந்து அவர் முதல் திரைப்படம் நடிப்பது வரை அவர் பட்ட கஷ்டம் ஒரு பக்கம் என்றால் அவர் ஹீரோவாக நடிக்கத் தொடங்கி இந்தியாவின் முன்னணி நடிகராக உருவானபோது தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள அவர் முயற்சித்த மெனக்கடல்கள் ஏராளம்.

ஆன்மிகம்
ரஜினிகாந்த் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். முதலில் ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் மீது அதிக பக்தி கொண்டவராக தனது ஆன்மிக பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த், அதன் பின் மகா அவதார் பாபாஜியின் மீது அதிக ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். அதன் காரணமாக இமயமலைக்கு அடிக்கடி சென்று அங்குள்ள பாபாஜியின் குகைக்குள் தியானம் செய்து வந்தார். “ஜெயிலர்” திரைப்படம் வெளிவந்த சமயத்தில் கூட அவர் இமயமலைக்குச் சென்றிருந்தார்.

பிடிக்காத குணம்
இவ்வாறு ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இந்த குணம் மட்டும் பிடிக்காதாம். அதாவது யாராவது அவரிடம் பொய் பேசினால் அவருக்கு சுத்தமாக பிடிக்காதாம். அதை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டாராம் ரஜினிகாந்த். இத்தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.