வெற்றி இயக்குனர்
சுந்தர் சி தமிழ் சினிமாவின் சிறந்த கமெர்சியல் இயக்குனராகவும் அதிக வெற்றிகளை கொடுத்த இயக்குனராகவும் வலம் வருகிறார். இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் நகைச்சுவை கலந்த செண்டிமெண்ட் திரைப்படங்களாகவும் அல்லது நகைச்சுவை கலந்த ஆக்சன் திரைப்படங்களாகவும் இருக்கும். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “மதகஜராஜா” திரைப்படம் எதிர்பாராவிதமாக மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது.

சுந்தர் சி செய்த சம்பவம்…
சுந்தர் சி இயக்கத்தில் 2003 ஆம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “வின்னர்”. இதில் பிரசாந்த், கிரண் ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடிக்க வடிவேலுவின் காமெடி காட்சிகள் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்கை செய்தது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் பங்கேற்ற சுந்தர் சி, இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டார்.

அதாவது இத்திரைப்படத்தில் முதலில் ஆர்த்தி அகர்வால் என்ற நடிகையைதான் ஒப்பந்தம் செய்தார்கள். முதல் கட்ட படப்பிடிப்பில் நடித்துக்கொடுத்த அவர், இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் நடிக்க மறுத்துவிட்டாராம். அதன் பிறகுதான் கிரண் இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மத்தாப்பு பேச்சுக்காரி” என்ற பாடலின் தொடக்கத்தில் ஆர்த்தி அகர்வால் சில காட்சிகளில் நடனமாடுவார், அதன் பின் கிரண் சில காட்சிகளிலும் நடனமாடுவார்.