முன்னணி கமெர்சியல் இயக்குனர்
தமிழ் சினிமாவின் முன்னணி கமெர்சியல் இயக்குனர்களில் முக்கியமானவராக வலம் வருபவர் சுந்தர் சி. நகைச்சுவை கலந்த ஆக்சன் திரைப்படங்களை இயக்குவதில் இவர் கில்லாடி. சமீபத்தில் வெளியான “மதகஜராஜா” திரைப்படம் இதற்கு மிகப்பெரிய உதாரணமாக அமைந்துள்ளது.

இத்திரைப்படம் 12 வருடங்கள் கழித்து வெளிவந்திருந்தாலும் தற்போது இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் இப்போதும் இத்திரைப்படம் புது திரைப்படம் போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
எனக்கு அங்கீகாரமே இல்லை
இந்த நிலையில் “மதகஜராஜா” திரைப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய சுந்தர் சி, “என்னுடைய படம் வெற்றிபெற்றாலும் என்னுடைய படத்திற்கு கூட்டம் வந்தாலும் எனக்கு மட்டும் ஒரு சின்ன வருத்தம் உண்டு. பெரிய பாராட்டு எனக்கு இருக்காது. இவ்வளவு ஹிட் கொடுத்திருந்தும் என்னுடைய பெயர் சிறந்த இயக்குனர்களின் பட்டியலில் இருக்காது.

30 வருடங்களாக பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும் எனக்கான உயரிய இடத்தை எவரும் கொடுக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. ஆனாலும் அதை பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை” என மன வேதனையுடன் தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.