சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி
ஆர்.ஜே.பாலாஜி-சரவணன் ஆகியோரின் இயக்கத்தில் நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மூக்குத்தி அம்மன்”. இத்திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படம் உருவாக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்திந் அறிவிப்பு வெளிவந்தது. இத்திரைப்படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார். இதனை நயன்தாராவும் ஐசரி கணேஷும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
சுந்தர் சி-ஐ கடுப்பேத்திய நயன்தாரா…

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு நாட்களாக தொடங்கப்படாத நிலையில் சுந்தர் சி நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டாராம். அப்போது நயன்தாரா ஏப்ரல் மாதம் இறுதியில்தான் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியும் என்று கூறிவிட்டாராம். இதனால் சுந்தர் சி கடுப்பில் உள்ளாராம். மேலும் இந்த இடைப்பட்ட நாட்களில் விஷாலை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை உருவாக்க உள்ளாராம். விஷாலை வைத்து சுந்தர் சி இயக்கிய “மதகஜராஜா” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.