கமல்ஹாசன்
உலக நாயகன் என்ற பட்டத்துடன் மக்களின் மனதில் வலம் வந்துகொண்டிருந்த கமல்ஹாசன், சமீபத்தில் தன்னை உலக நாயகன் என்ற பட்டத்தோடு அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். எனினும் “தக் லைஃப்” திரைப்படத்தில் விண்வெளி நாயகன் என்று பின்னணியில் பாடப்பட்டது ரசிகர்களை Goosbumpsக்கு உள்ளாக்கியது. “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் “இந்தியன் 3” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை ஷங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிபடுத்தியுள்ளார்.

அன்பறிவுடன் புகைப்படம்
“தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அன்பறிவ் கமல்ஹாசன் ஆகியோர் அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு சென்றுள்ளனர். அங்கே அவர்கள் மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

