சிம்புவின் பிறந்தநாள்
நேற்று சிம்பு தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவர் புதிதாக நடிக்க உள்ள மூன்று திரைப்படங்களின் அப்டேட்டுகள் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தின் அப்டேட்டும் 50 ஆவது திரைப்படத்தின் அப்டேட்டும் வெளிவந்தது.

இதில் சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை “பார்க்கிங்” பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். மேலும் 50 ஆவது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இதனை தொடர்ந்து சிம்புவின் 51 ஆவது திரைப்படத்தின் அறிவிப்பும் வெளிவந்துள்ளது.
கடவுளே…சிம்புவே…
சிம்புவின் 51 ஆவது திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். ஏற்கனவே இந்த புராஜெக்ட் அறிவிக்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் சிம்பு தனது 51 ஆவது திரைப்படமாக இவரது இயக்கத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் காதலின் கடவுளாக சிம்பு நடிக்க உள்ளார் என்று அறிவிப்பு போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இதற்கு முன் “ஓ மை கடவுளே” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் “டிராகன்” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
