களைகட்டப்போகும் சிம்புவின் கெரியர்…
நடிகர் சிலம்பரசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து தனது 49 ஆவது திரைப்படத்தில் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் இணையவுள்ளார்.

மேலும் தனது 50 ஆவது திரைப்படத்தில் தேசிங்கு பெரியசாமியுடனும் 51 ஆவது திரைப்படத்தில் அஸ்வத் மாரிமுத்துவுடனும் இணையவுள்ளார். இம்மூன்று இயக்குனர்களுமே தமிழ் சினிமாவின் இளம் வெற்றி இயக்குனர்கள் என்பதால் இத்திரைப்படங்களுக்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் சிலம்பரசனின் 49 ஆவது திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
சிம்புவின் கதாபாத்திரம் இதுதான்…
அதாவது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ள 49 ஆவது திரைப்படத்தில் சிம்பு ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இத்திரைப்படத்தில் சிம்பு கல்லூரி ஆசிரியராக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது. ஆனால் தற்போது அவர் ரவுடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சிலம்பரசனின் 49 ஆவது திரைப்படத்தை Dawn Pictures நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.