சிம்புவின் பிறந்தநாள்
சிம்பு இன்று தனது 42 ஆவது வயதுக்குள் நுழைகிறார். இன்று இவரது பிறந்த நாளில் மூன்று திரைப்படங்கள் குறித்த அப்டேட் வெளிவரும் என கூறப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு தனது “X” தளத்தில் சிம்பு “Silambarasan TR’s Next 3 on Feb 3” என்று ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தார். அந்த வகையில் இன்று சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இவர்தான் டைரக்டரா?
சிம்பு தனது 49 ஆவது திரைப்படத்தில் “பார்க்கிங்” பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் இணைகிறார். இத்திரைப்படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அந்த போஸ்டரில் சிம்பு தனது கையில் பொறியியல் துறை சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தையும் அதற்குள் ரத்தக்கறையுடன் ஒரு கத்தியும் காணப்படுகிறது.

சிம்பு இத்திரைப்படத்தில் ஒரு கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்பது இதில் இருந்து தெரிய வருகிறது. இத்திரைப்படத்தை Dawn Pictures சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.