STR 48
“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” என்ற ஹிட் திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியுடன் சிம்பு தனது 48 ஆவது திரைப்படத்தில் இணையவுள்ளார். இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டபோது இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தார். இத்திரைப்படம் வரலாற்று புனைவு திரைப்படமாக உருவாக உள்ளது. ஆதலால் இத்திரைப்படத்திற்கு ரூ.200 கோடி பட்ஜெட் பிடிக்கும் என்று கூறப்பட்டது. எனவே இந்த புராஜெக்டில் இருந்து ராஜ்கமல் நிறுவனம் வெளியேறியதாக கூறப்பட்டது.

துபாய் தயாரிப்பாளர்
இதனை தொடர்ந்து இத்திரைப்படம் துபாயில் உள்ள ஒரு தொழிலதிபரிடம் கைமாறியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை ரூ.100 கோடி பட்ஜெட்டில் முடிக்குமாறு தயாரிப்பாளர் இயக்குனரிடம் கூறியிருக்கிறாராம். அதற்கு தேசிங்கு பெரியசாமியும் சம்மதித்துள்ளாராம். ஆனால் இந்த புராஜெக்ட்டை ரூ.100 கோடிக்குள் முடிக்க வாய்ப்பே இல்லை என இந்த புராஜெக்ட்டை குறித்து கேள்விப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கின்றனராம். ஆதலால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் சந்தேகம் இருப்பதாக கூறுகின்றனர்.