STR 48
சிலம்பரசனின் 48 ஆவது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாகவும் அத்திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் இத்திரைப்படம் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்திற்கு ரூ.200 கோடி பட்ஜெட் தேவைப்படுவதாக இயக்குனர் தரப்பில் இருந்து கூற கமல்ஹாசன் இந்த புராஜெக்டில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது.

துபாய் தயாரிப்பாளர்
இதனை தொடர்ந்து துபாயை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் இத்திரைப்படத்தை தயாரிக்க முன் வந்ததாகவும் இத்திரைப்படத்தின் பட்ஜெட்டை 160 கோடிக்குள் சுருக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் துபாய் தயாரிப்பாளர் தேசிங்கு பெரியசாமியிடம் ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம்.

அதாவது இத்திரைப்படத்தின் மையக்கதையை வைத்து ஒரு டீசர் ஒன்றை படமாக்கி அதனை தனக்கு திரையிட்டு காட்டிய பின் இந்த படத்தை தான் தயாரிப்பதா? வேண்டாமா? என முடிவு செய்து சொல்வதாக துபாய் தயாரிப்பாளர் தேசிங்கு பெரியசாமியிடம் கூறியுள்ளாராம். இந்த டீசர் படப்பிடிப்பிற்கான செலவுகளையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் அத்தயாரிப்பாளர் கூறியுள்ளாராம்.