அல்லு அர்ஜூன் கைது
கடந்த 5 ஆம் தேதி “புஷ்பா 2” திரைப்படம் வெளியான நிலையில் அதற்கு முந்தைய நாள் இரவு ஹைதராதாபாத்தில் அமைந்துள்ள சந்தியா திரையரங்கத்தில் “புஷ்பா 2” திரைப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது. அப்போது அங்கு அல்லு அர்ஜூன் வருகை புரிந்திருந்தார். அல்லு அர்ஜூனை பார்ப்பதற்கு கூட்டம் அலை மோதிய நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி என்ற பெண்ணும் அவரது 9 வயது மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி ரேவதி உயிரிழந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதியப்பட்டது. இதனை தொடர்ந்து அல்லு அர்ஜூன் நேற்று விசாரணைக்காக கைது செய்யப்பட்டு ஜாமீனிலும் வெளிவந்தார்.
அல்லு அர்ஜூன் வழக்கில் திருப்பம்
இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துபோன ரேவதியின் கணவர் பாஸ்கர், அல்லு அர்ஜூன் மீதான வழக்கை திரும்ப பெறப்போவதாக நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், “எனது மனைவி இறந்ததற்கு அல்லு அர்ஜூன் பொறுப்பல்ல. அவர் கைது செய்யப்பட்டthu எனக்கு முதலில் தெரியாது. செய்தி சேன்னல்களை பார்த்த பிறகுதான் தெரிந்துகொண்டேன்” எனவும் கூறியுள்ளார்.