ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். ரஜினிகாந்த் அதற்கு முன்பு நடித்த “அண்ணாத்த” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதே போல் நெல்சன் அதற்கு முன்பு இயக்கிய “பீஸ்ட்” திரைப்படமும் மோசமான வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இருவருக்குமே “ஜெயிலர்” திரைப்படம் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

ஜெயிலர் 2
“ஜெயிலர்” திரைப்படத்தின் மாபெறும் வெற்றியை தொடர்ந்து தற்போது “ஜெயிலர் 2” திரைப்படத்திற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளன. ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ்ஜின் “கூலி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு மார்ச் மாதம் “ஜெயிலர் 2” திரைப்படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளாராம்.

இந்த நிலையில் “ஜெயிலர் 2” திரைப்படத்தில் கே.ஜி.எஃப் கதாநாயகியான ஸ்ரீநிதி ஷெட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அதே போல் இத்திரைப்படத்தில் தமன்னாவையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். மேலும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்த விநாயகம் தவிர்த்து மற்ற முக்கிய நடிகர்கள் அனைவரும் “ஜெயிலர் 2” திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.