தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா.
இவர் வளர்ந்து வந்த புதிதிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.
குறிப்பாக ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் நடிகை ஸ்ரீதிவ்யா.
ஹைதராபாத் தெலுங்கானா மாநிலத்தை சொந்த ஊரா கொண்ட ஸ்ரீதிவ்யா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் திரையுலகில் மூன்று வயதிலேயே தன்னுடைய நடிப்பு வாழ்க்கை தொடங்கினார் .
ஆம், குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது நடிக்க தொடங்கினார். தெலுங்கு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார் .
முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு ரவி பாபு விளக்கத்தில் மனசார எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் .
ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்தது அதை அடுத்து தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்த 2013 ஆம் ஆண்டில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.
Also Read : திருமணத்திற்கு சித்தார்த் செட்டில்… அதிதியின் சொத்து கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்!
அவரின் அந்த முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அவருக்கு ஆன மார்க்கெட்டை உச்சத்தில் உட்கார வைத்தது .
தொடர்ந்து தமிழில் ஜீவா , வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், மருது,ஈட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .
கடைசியாக கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த மெய்யழகன் திரைப்படத்தின் நடித்திருந்தார்.
அப்படத்தின் விழாவில் மேடையில் பேசிய ஸ்ரீ திவ்யா எனக்கு என்னுடைய அம்மாவுக்கு பிறகு உண்மையான காதல் உண்மையான ஒரு அன்பு கிடைக்கவே இல்லை சார் என கார்த்தியிடம் கூறினார்.
நான் இன்னும் அதை தேடிக் கொண்டிருக்கிறேன் சார். எனக்கு யாரும் அதைப் போன்ற ஒரு உண்மையான ஒரு அன்பு கொடுத்ததே இல்லை என மிகவும் எமோஷ்னலாகி பேசி கண்கலங்கி பேசி இருந்தார் ஸ்ரீதிவ்யா. அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது