நினைவில் வாழும் இயக்குனர்
“இயற்கை” என்ற அற்புதமான படைப்பை தமிழுக்கு கொடுத்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், “இயற்கை” திரைப்படத்தை தொடர்ந்து “ஈ”, “பேராண்மை” போன்ற வெற்றித் திரைப்படங்களையும் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட சமூக கருத்துக்கள் உடைய திரைப்படங்களையும் பார்வையாளர்கள் ரசிக்கும் வண்ணம் கொடுத்தார்.

அவர் ஒரு தீவிர இலக்கிய வாசிப்பாளர். கம்யூனிச சிந்தனை கொண்டவர் என்பதால் உலக அரசியலையும் படிக்க கூடியவர். இவ்வாறு ஒரு மிகச் சிறந்த படைப்பாளியாக திகழ்ந்த ஜனநாதன் தனது “லாபம்” திரைப்படத்தை படமாக்கிய சமயத்தில் உடல் நிலை மோசமானதின் காரணமாக உயிரிழந்தார்.
இன்டெர்ஸ்டெல்லார் கதையை அன்றே கூறியவர்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் ஜீவா, “என்னை பொறுத்தவரை ஜனநாதன் சார் ஒரு என்சைக்ளோபீடியா. அவர் பேசுவதெல்லாம் முத்து முத்தாக இருக்கும். கார்ல் மார்க்ஸ் குறித்து பேசுவார், ரஷ்ய நாவல் குறித்து பேசுவார்.

இன்டெர்ஸ்டெல்லார் மாதிரியான ஒரு கதையை பல ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். ஒரு பையன் விண்வெளிக்குப் போய் திரும்ப பூமிக்கு வரும்போது தந்தை பையனாக இருப்பார் என்று இன்டெர்ஸ்டெல்லார் மாதிரியான கதையை அன்றே கூறினார்” என்று ஒரு ஆச்சரியமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.