பெங்கால் தாதா
கிரிக்கெட் உலகில் பெங்கால் தாதா என்று பெயர் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஒரு வெப் சீரீஸில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வைரல் ஆகி வருகிறது. ஆனால் அவர் உண்மையில் அந்த வெப் சீரீஸில் நடிக்க உள்ளாரா? என்பது குறித்து பார்க்கலாம்.

காக்கி:தி பெங்கால் சேப்டர்
நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்திற்காக “காக்கி:தி பெங்கால் சேப்டர்” என்ற வெப் சீரீஸ் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க ஒரு போலீஸ் இன்வெஸ்டிகேசன் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்த வெப் சீரீஸ் வருகிற 20 ஆம் தேதி முதல் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

திடீரென நுழைந்த கங்குலி
இந்த நிலையில் “காக்கி: தி பெங்கால் சேப்டர்” வெப் சீரீஸிற்கான புரொமோ வீடியோ ஒன்று நேற்று வெளியானது. அதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான கங்குலி அந்த புரொமோவில் இடம்பெற்றிருந்தார். ஆனால் அந்த புரொமோவில் அவர் மிகவும் ஜாலியான ஒரு பெர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்தியிருந்தார். அந்த புரொமோவின் இறுதியில் கங்குலி, “இந்த வெப் சீரீஸில் எனக்கு வேறு எதாவது ரோல் இருக்கிறதா?” என கேட்க அதற்கு அந்த புரொமோவில் இயக்குனராக நடித்திருந்த நடிகர், “தாதா, நீங்கள் வெப் சீரீஸிற்காக மார்க்கெட்டிங் செய்கிறீர்களா?” என கேட்கிறார்..
இதில் இருந்து சௌரவ் கங்குலி இந்த வெப் சீரீஸின் புரொமோஷன் பணிகளில் ஈடுபடுவார் என தெரிய வருகிறது. சௌரவ் கங்குலி இதில் நடிக்க உள்ளாரா? இல்லையா? என்பது குறித்து நெட்பிலிக்ஸ் நிறுவனம் எதுவும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.