உழைப்பால் உயர்ந்தவர்
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சினிமாத் துறைக்குள் வந்தவர் சூரி. இவர் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகளில் எலெக்டிரீசியனாக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது சினிமாத்துறையில் சிறு சிறு பணிகளையும் செய்து வந்துள்ளார்.

ஒரு காலகட்டத்திற்கு பிறகு “மறுமலர்ச்சி”, “சங்கமம்”, “ரெட்”, “வின்னர்”, “காதல்”, “ஜீ” போன்ற பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி, “வெண்ணிலா கபடிக் குழு” திரைப்படத்தின் மூலம் புரோட்டா சூரியாக ரசிகர்களிடையே பிரபலமானார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்த சூரி, தற்போது கதாநாயகனாக உருவெடுத்துள்ளார்.
சூரி தந்தையின் பயோபிக்
சூரியின் தந்தையின் பெயர் முத்துசாமி. இவர் ஒரு நாட்டுப்புற கலைஞர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரீஸ் ஆக உருவாக்கவுள்ளாராம் சூரி. இந்த வெப் சீரீஸை சூரி தயாரிக்க உள்ள நிலையில் இதனை விக்ரம் சுகுமாரன் இயக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் ஆனந்தியை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதில் சூரியின் தந்தை கதாபாத்திரத்தில் சூரியே நடிக்கவுள்ளாராம்.

இவ்வாறு ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. சூரியின் தந்தை 2017 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு பிரிந்த நிலையில் தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரீஸாக சூரி தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.