Tuesday , 19 November 2024
Home Cinema News அவ வாழ்ந்த வீட்டில் நான் கால் வைக்கமாட்டேன் – நாக சைதன்யாவுடன் சோபிதா சண்டை!
Cinema News

அவ வாழ்ந்த வீட்டில் நான் கால் வைக்கமாட்டேன் – நாக சைதன்யாவுடன் சோபிதா சண்டை!

samantha naga chaitanya

தெலுங்கு சினிமாவில் நட்சத்திர ஜோடியாக பார்க்கப்பட்டவர்கள் தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஜோடி.

இவர்கள் இருவரும் ஹே மாயா சேஷாவே திரைப்படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்த போது காதல் ஏற்பட்டு கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக காதலித்து வந்தனர்.

அதன் பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் கிறிஸ்துவம் மற்றும் ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணம் அனைவரது பார்வையும் ஈர்த்தது. குறிப்பாக சமந்தா நாக சைத்தன்யா காதலர்களின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்டார்கள்.

samantha

அந்த அளவுக்கு சிறந்த ஜோடியாக இருந்து வந்த இவர்களுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை திடீரென கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள் .

சமந்தா விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார். இதனிடையே நாக சைதன்யா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற சோபிதா துலிபாலாவை ரகசியமாக காதலித்து பின்னர் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது தற்போது திருமண சடங்குகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது.

Also Read : அப்பாவுக்கு தெரியாமல் அம்மா வாங்கிய ரூ.25,000 கடன்…. ஜோதிகா யார் கூடவும் நடிக்க கூடாது – சூர்யா கறார்!

விஷயம் எப்படி இருக்க சோபிதா துலிபாலா நாக சைதன்யா உடன் பயங்கரமாக சண்டை போட்டு விட்டாராம். அதாவது சமந்தா வாழ்ந்த வீட்டில் நான் காலடி எடுத்து வைக்கவே மாட்டேன்.

அந்த வீட்டில் நான் வாழ்ந்தால் சமந்தா பற்றிய நினைவுகள் தான் எப்போதும் வரும். அதனால் அந்த வீட்டில் வாழ எனக்கு விருப்பமே இல்லை என நாக சைதன்யாவிடம் பயங்கரமாக சண்டை போட்டாராம் .

naga chaitanya sobhita

நாக சைதன்யா இது சமந்தா வீடு இல்லை… இது என்னுடைய வீடு இருவரும் சேர்ந்து வாழ்ந்தோமே தவிர இது சமந்தா வீடு ஒன்றும் இல்லை என எடுத்து கூறியும் சோபிதா அதை ஏற்க மறுத்துவிட்டாராம்.

இதை அடுத்து இவர்களின் இந்த பிரச்சனையில் நாகார்ஜுனா தலையிட்டு பிரச்சனையை சரி செய்ய முடிவு எடுத்திருக்கிறார்.

இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை. அரசல் புரசலாக இப்படியாக அங்குள்ள மீடியாக்கள் செய்திகள் தெரிவிக்கிறது.

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...