புதிய திரை மொழி
இயக்குனர் பாலு மகேந்திரா கோலிவுட் சினிமாவில் புதுமையான திரை மொழியை கையாண்டவர். தமிழ் சினிமாவில் யதார்த்த படைப்புகளின் முன்னோடியாக திகழ்ந்து வந்த பாலு மகேந்திரா தமிழ் சினிமா ரசிகர்களிடம் காலத்தை தாண்டி நிற்கக்கூடிய இயக்குனராக வலம் வருகிறார்.

ராமன் அப்துல்லா
பாலு மகேந்திரா இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ராமன் அப்துல்லா”. இத்திரைப்படத்தில் சிவக்குமார், கரண், அஸ்வினி, ஈஸ்வரி ராவ் உட்பட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்தமிழே முத்தமிழே” என்ற பாடல் இப்போதும் தமிழ் இசை ரசிகர்களிடையே மிகப் பிரபலமான பாடலாகும்.

நடிக்க வேண்டாம்னு சொன்னாங்க…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை அஸ்வினி,”பாலு மகேந்திரா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது பலரும் பாலு மகேந்திரா படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறினார்கள். அவரது படப்பிடிப்பு ரம்மியமான அனுபவமா இருக்காது என்று கூறினார்கள்.

எனது அம்மா என்னுடன் இருக்கும்போது அப்படி என்ன நடந்துவிடப்போகிறது என்று நான் படப்பிடிப்பிற்கு கிளம்பிவிட்டேன். பாலு மகேந்திராவிடம் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. அதீத நடிப்பை அவர் விரும்ப மாட்டார். முத்தமிழே முத்தமிழே பாடலை படமாக்கும்போது ஒரு காட்சியில் நான் நடித்தது அவருக்கு திருப்தியளிக்கவில்லை. 14 முறை ரீடேக் போனது. 14 ஆவது முறைதான் அவர் ஓகே என்றார்” என அஸ்வினி அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.